Breaking

Saturday, July 10, 2021

பல்கலை முறைகேடு விசாரணை: 3 மாதத்தில் அறிக்கை

சென்னை:உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணை: சேலம் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து, செய்திகள் வெளியாகி உள்ளன.


மதுரை காமராஜ் மற்றும் அண்ணாமலை பல்கலையிலும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துஉள்ளன.எனவே, இது குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் சங்கீதா, பல்கலைகளுக்கான அரசின் இணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் விசாரணை நடத்த உள்ளனர். தங்களின் விசாரணை முடிவுகளை, மூன்று மாதத்தில் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog