அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் மீண்டும் 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேரா சிரியர் பணியிடங்களில் தொகுப் பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர்.
அதன்படி, 2020-21 கல்வியாண்டுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். பின்னர், இவர்களுக்கான ஊதியம் ரூ.20 ஆயிரமாக கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது.
அதேநேரம், காலிப் பணி யிடங்களில் தங்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2021-22 கல்வியாண் டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சுழற்சி 1-ல் 3,443 கவுரவ விரிவுரை யாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்கல்வித் துறைக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கடந்த மே 12-ம் தேதி கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து, 150 அரசு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், அதில் காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்களை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக அனுப்புமாறு கல்லூரி கல்வி இயக்குநருக்கு உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுழற்சி 1-ல் 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய தேவைப்படும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரத்தை அனுப்பவும் உத்தர விட்டுள்ளது.
அதன்படி, கல்லூரி கல்வி இயக்குநர், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விவரங்களை உடனே அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட 2,423 விரிவுரை யாளர்களின் பணிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந் நிலையில்தான் அப்பணியிடங் களோடு கூடுதலாக 1,020 பணியிடங்களுக்கு விரிவுரையாளர் களை நியமிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நிய மிப்பதற்காக அரசாணை வெளி யிடப்படும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Search This Blog
Thursday, July 22, 2021
Comments:0
Home
GUEST LECTURERS
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,443 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்: உயர்கல்வித் துறை திட்டம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,443 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்: உயர்கல்வித் துறை திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.