சிறைத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் அறிவுரை
சிறைத்துறை காலி பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.
மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக சிறைகளில் 24 கூடுதல் கண்காணிப் பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கைதி களை விடுவிப்பது, நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீழ்நிலை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கைதிகளின் குடும்பத்திற்கு நல உதவி செய்வது, கவுன்சிலிங் அளிப்பது, சமூக நல அலுவலர்கள் பணி. இப்பணியிடங்களில் 12 காலி இடங்கள் உள்ளன.
மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள், புதுக் கோட்டைஇளங்குற்றவாளிகள்சீர்திருத்தப்பள்ளி யில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக உள்துறை, கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி, ‘மனுதாரர், முக்கியமான பிரச்னையை நீதிமன்றத் தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். சிறை நிர்வாகத்தில் உள்ள நடைமுறை சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தகுந்த முடிவெடுக்க இந்நீதிமன்றம் வலியுறுத்துகிறது' என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.