பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, 22ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது . இந்நிலையில், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளில், நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழுடன், பள்ளி மாற்று சான்றிதழான, டி.சி.,யும், நன்னடத்தை சான்றிதழும் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.