இளநிலை பட்டப்படிப்பு 'அட்மிஷன்' துவக்கம் கல்லுாரிகளுக்கு தனித்தனி விண்ணப்பம் தேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

இளநிலை பட்டப்படிப்பு 'அட்மிஷன்' துவக்கம் கல்லுாரிகளுக்கு தனித்தனி விண்ணப்பம் தேவை

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஒவ்வொரு கல்லுாரிக்கும், தனித்தனி விண்ணப்பங்களை பதிவு செய்ய, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, நேற்று முதல் ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கியது.கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளங்கள் வழியே, வரும் 10ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஒவ்வொரு விண்ணப்ப பதிவுக்கும், 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாநிலம் முழுதும், 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.

மாணவர்கள் தாங்கள் விருப்பப்படும் கல்லுாரிகளில், விருப்பப்படும் பாட பிரிவுகளை தேர்வு செய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு கல்லுாரிக்கும் தனித்தனியே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு கல்லுாரி விண்ணப்பத்துக்கும், 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கல்லுாரியின் விண்ணப்பத்தில், தங்களுக்கு தேவையான பாட பிரிவுகளை விருப்ப வரிசைப்படி குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர், ஒரு விண்ணப்பத்தில் எத்தனை சாய்ஸ் வேண்டுமென்றாலும் குறிப்பிடலாம் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.கல்லுாரி மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, 044 - 2826 0098, 044 - 2827 1911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், care@tngasa.org என்ற இ- - மெயிலில் கடிதம் அனுப்பலாம் என, மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews