ஜூலை 26 முதல் 40 மையங்களில் போலீஸ் உடற்தகுதி தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

ஜூலை 26 முதல் 40 மையங்களில் போலீஸ் உடற்தகுதி தேர்வு

ஜூலை 26 முதல் 40 மையங்களில் போலீஸ் உடற்தகுதி தேர்வு தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பாளர் என 11,741 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்தாண்டு டிச.,13ல் நடந்தது.
இதன் முடிவு கடந்த பிப்.,19ல் வெளியிடப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 8 ல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் ஜூலை 26 முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடக்க உள்ளதாக சீருடை பணியாளர் தலைவர் சீமா அகர்வால் அறிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 40 மையங்களை தயாராக வைத்திருக்கும்படி கமிஷனர்கள், எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
IMG_20210703_120626

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews