பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கு - போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி 24-07-2021. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கு - போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி 24-07-2021.

பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கு
மற்றும் திறனறி போட்டிகள்:

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி மற்றும் விபா நிறுவனம் இணைந்து ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான அறிவியல் திறனறி தேர்வான வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் தேர்வை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொரொனோ பேரிடர் கால கட்டத்தில் பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழி கருத்தரங்கும், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியையும் அறிவித்துள்ளது.

கருத்தரங்கு மற்றும் போட்டிகளின் நோக்கம்:

பள்ளி/கல்லூரி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ”ஆகார்கிராந்தி” என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்கலாம். இணையவழி கருத்தரங்கு:

இணையவழி கருத்தரங்கு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 23 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். மொத்தம் ஐந்து கருத்தரங்குகள் நடைபெறும்/ கருத்தரங்குகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் உணவு பழக்கவழக்க முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


வீடியோ தயாரித்தல் மற்றும் திறனறி போட்டிகள்:

இந்த போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளுக்கான தலைப்பு:

Ø நமது உள்ளூர் பழங்கள், காய்கறிகள், சரிவிகித உணவு இயற்கையான ஊட்டச் சத்துள்ள பொருட்கள், பாரம்பரிய உணவுகள், பாதுகாக்கப்பட்ட உணவு முறைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று முதல் ஐந்து நிமிட வீடியோக்களாக எடுத்து அனுப்பலாம்.

Ø வீடியோவாக அனுப்ப இயலாதவர்கள் கதை, கவிதை, கட்டுரை கருத்துவரைபடம், ஓவியம், ஆகிய ஏதாவது ஒரு முறையில் தங்களின் படைப்புகளை மேற்காண் தலைப்புகளில். அனுப்பலாம் .

Ø வீடியோக்கள் மற்றும் கதை., கவிதை, கட்டுரை ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எடுத்து அல்லது எழுதி அனுப்பலாம்.

Ø இவை அனைத்தும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டுவதாக அமைய வேண்டும். பரிசுகள்,மற்றும் முக்கிய தேதிகள்:

Ø தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம், இரண்டாம் பரிசாக 7000, மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 10 ஆசிரியர்களுக்கு 3000 ரொக்கப்பரிசுகளாக வழங்கப்படும்.

Ø அதோடு மட்டுமல்லாமல் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Ø மேலும் தமிழக அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

Ø கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி 24-07-2021.

Ø கீழ்காணும் இணைய தளம் வழியாக பதிவு செய்யலாம்

Ø http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/

Ø வீடியோ மற்றும் படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 30.09.2021

Ø போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி 22.12.2021

மேலும் தகவல்களுக்கு
கண்ணபிரான்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆகார்கிராந்தி-வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்
Cell:8778201926
Email: vvmtamilnadu@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews