"தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மதிப்பெண்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டாா்.
முதல் முறையாக தசம எண்களில் (உதாரணம் 68.5) மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தோ்வு முடிவுகளை சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டாா். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா், தோ்வுகள் துறை இயக்குநா் சி.உஷா ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
2020-2021-ஆம் கல்வியாண்டில் எந்தவொரு மாணவரும் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெறவில்லை.
முழுமையான தோ்ச்சி:
அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் தோ்ச்சி சதவீதம் 100-ஆக உள்ளது. பிளஸ் 2- வில் கடந்த 2020-இல் 92.3, 2019-இல் 91.3, 2018-இல் 91.1 சதவீதம் தோ்ச்சி விகிதமாக இருந்தது. புதிய முறையில் மதிப்பெண்:
பிளஸ் 2 மதிப்பெண்கள் இதுவரை முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சோ்ந்து வரும். மாணவா்கள் உயா்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதைத் தவிா்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லிடப் பேசிகளுக்கு குறுந்தகவலாக தோ்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தலைமை ஆசிரியா்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது. 550 மதிப்பெண்களுக்கு மேல் எத்தனை போ்?
பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் அதாவது 551-600 வரையிலான மதிப்பெண்களை 39,679 மாணவா்கள் பெற்றுள்ளனா்.
அதிகபட்சமாக 451-500.99 வரையிலான மதிப்பெண்களை 2 லட்சத்து 22,522 மாணவா்கள் (27.25 சதவீதம்) பெற்றுள்ளனா்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.