ஆந்திராவில் தற்பொழுது துவங்கியுள்ள 2021-22 ஆம் புதிய கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த முடிவு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ஆகஸ்ட் 16 ம் தேதி அரசு வெளியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை, முதல் கட்டமாக அரசுப் பள்ளிகளுக்கு துவங்கும் எனவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் PP-1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆறு வகைகளாக பள்ளிகள் வகைப்படுத்தப்பட்டு வகுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் புதிய கல்வி கொள்கை குறித்த தெளிவான விளக்கங்களை உரியவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கொள்கையை செயல்படுத்த ஆந்திரா மாநில அரசு சுமார் ரூ.16,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகளை நடத்த முடியாததால், தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்லிப் சோதனைகளின் கீழ் 70% மதிப்பெண்களும், உள் மதிப்பீடுகளில் 30% மும் இறுதி மதிப்பெண்களாக வழங்கப்பட இருக்கிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.