புதுச்சேரியில் வரும் ஜூலை 26 ம் தேதி நடைபெற இருந்த கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அகமதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என புதுச்சேரி உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு ரத்து:
புதுச்சேரியில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இடையில் 3 ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த கல்வியாண்டியலும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து கல்லூரியின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முலமாகவே நடைபெற்றது. புதுச்சேரியில் தடுப்பூசியின் விளைவாக கொரோனா சற்று குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 26ம் தேதி நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. அதற்கான அறிவிப்புகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பியது. ஆனால் தற்போது ஜூலை 26ம் தேதி முதல் நடைபெற இருந்த முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை அதே சமயம் தடுப்பூசிகளும் 100 சதவீதம் செலுத்தி முடிக்கப்படவில்லை எனவே இந்த நிலையை கருத்திற் கொண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அக மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என புதுச்சேரி உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.