தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கல்லூரி இல்லாத பட்சத்தில், வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் அந்நாடு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி 2019-ம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை அமையும் இடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சுற்றுச்சுவர் எழுப்பியதோடு கட்டுமான பணிகள் பாதியோடு நின்றுவிட்டது. தற்போது ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், 150 மாணவர்களை சேர்த்து கொள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மாணவர்களை, புதுச்சேரி ஜிப்மர், மதுரை அரசு மருத்துவ கல்லுாரி அல்லது தனியார் கல்லூரி, மதுரை கலை கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் அனுமதித்து, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளை நடத்தவும், கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தோப்பூரில் மாணவர்களை மாற்றி கொள்ளலாம் எனவும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் கருத்துக்களை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மாணவர்கள் என 150 மாணவர்களை அனுமதித்து வகுப்புகளை தொடங்கலாமா அல்லது இதனுடன் தூத்துக்குடி, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து, 5 மருத்துவக் கல்லூரியில் தலா 30 என மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாமா என்பது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் . இது குறித்து அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பசுமை திட்டம் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.