"தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த பிப்ரவரியில் இயற்றப்பட்டது. இந்தநிலையில் இதற்கான அரசாணை கடந்த திங்கள்கிழமை வெளியானது.
இதைத் தொடா்ந்து கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை இதற்கான விண்ணப்ப படிவத்தில், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான ஙஆஇ(ய) என்ற புதிய பிரிவு தரப்பட்டுள்ளது. சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் இதன்படி விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே ஙஆஇ பிரிவின் கீழ் பொதுவாக விண்ணப்பித்தவா்களுக்கு அன்ற்ா் இா்ழ்ழ்ங்ஸ்ரீற் மூலம் வன்னியா் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிடும். தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வின் போது முழுமையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு சோ்க்கை நடைபெறும் என உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சுமாா் 16,000 இடங்களும், கலை- அறிவியல் படிப்புகளில் சுமாா் 10,000 இடங்களும் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.