ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய CEO உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 30, 2021

Comments:0

ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய CEO உத்தரவு.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணவிகளுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் தற்போது அதிகரித்து வரும் சூழலில் இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமித்து விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். குறிப்புகள்:
1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு, நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும் பேதம் பிரித்து பார்க்க வேண்டியதில்லை.
3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும்.

4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின் பெயருடன் அனுப்பவும்.

5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் கரூர் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது. பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும். நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

படிவம்

https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews