RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 15, 2021

Comments:0

RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!

IMG_20210615_161411
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,
சென்னை - 600 006
ந.க.எண்.14813/ அ4 / இ1 / 2021, நாள்.06 .05.2021.
பொருள்: பள்ளிக் கல்வி 2012 2013 ஆம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டது 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்ட பணியிடங்கள் சார்பாக காலிப் பணியிட விவரங்கள் கோருதல் -சார்பு. பார்வை 1ல் காணும் அரசாணையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டது. 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு பணிந்தனுப்பப்பட்டதில், பார்வை 2ல் காணும் அரசுக் கடிதத்தில் கீழ்க்காணும் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக பார்வை 3ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்க்காணும் கூடுதல் விவரங்களை உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMG_20210615_161358
IMG_20210615_161321

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews