IDBI வங்கியில் ATM மூலம் பணம் எடுப்பது, காசோலை, டெபாசிட் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள புதிய கட்டணங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் அடுத்த மாதம் முதல் அவ்வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
IDBI வங்கி சேவை
வழக்கமாக IDBI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யும் போது ஐந்து விதமான இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த சலுகையானது அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள கிளைகளுக்கும் பொருந்தும். அதிலும் சூப்பர் சேமிப்பு மற்றும் கணக்குகளுக்கு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 8 இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படும். இதை தவிர வங்கி கிளைகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் IDBI வங்கி அறிவித்த புதிய விதிகள் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி காசோலை வழங்குவதற்கான கட்டணங்களையும் IDBI வங்கி திருத்தியுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 20 முறை இலவசமாக காசோலை பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதை விட அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காசோலை பரிவர்த்தனைக்கும் ரூ .5 செலுத்த வேண்டும். இது தவிர லாக்கர் வாடகைக்கான கட்டணங்களையும் IDBI வங்கி புதுப்பித்துள்ளது. மேலும் JubileePlus மூத்த குடிமக்கள் சேவையின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதாந்திர சராசரி இருப்பு ரூ.10,000 க்கும் குறைவாக இருந்தால் லாக்கர் வாடகைக்கு தள்ளுபடி கிடைக்காது. ஒரு ஆண்டின் 12 மாதங்களுக்கும் வங்கி கணக்கில் ரூ.10,000-24,999 இருந்தால் நிலுவைத் தொகையில் 10 சதவீத தள்ளுபடியும், ரூ.25,000 க்கு 15 சதவீத நிலுவைத் தொகையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தவிர A மற்றும் B சைஸ் லாக்கர்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஜூபிலிபிளஸ் மற்றும் சூப்பர் ஷக்தி கணக்குகளின் வாடிக்கையாளர்கள் பிற வங்கி ATM களில் இருந்து மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை 5 பரிவர்த்தனைகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்டண மாற்றமும் அடுத்த மாதம் முதல் IDBI வங்கியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.