வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம் – ஜூன் 30 இறுதி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 16, 2021

Comments:0

வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம் – ஜூன் 30 இறுதி நாள்!

கொரோனா பரவலை தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளில் மூத்த குடிமக்களுக்காக வழங்கப்படும் நிலையான வைப்பு திட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சேவைகள் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால், விரைந்து சேவைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FD திட்டம்
வங்கிகளில் 5 ஆண்டுகள் முதல் 10ஆண்டுகள் வரை பணத்தை டெபாசிட் செய்து அதிக லாபத்தை தரும் சிறப்பு வைப்பு தொகை (FD) திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அப்போது கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி வந்த காரணத்தால், மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் இந்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் ஜூன் 30 வரை மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்காக இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான SBI வங்கி, ICICI வங்கி, HDFC வங்கி சிறப்பு FD ல் 50% அடிப்படை புள்ளிகளை கூடுதலாக அறிவித்தன. அதன் படி SBI வங்கியில் 5 ஆண்டுகளுக்கான FD க்கு 5.4% வட்டியும், HDFC வங்கியில் 0.75% வட்டியும் கிடைக்கிறது. ஆனால் இவ்வங்கிகளில் FD திட்டத்தில் 6.25% சிறப்பு வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
தவிர ICICI வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு 6.30% வட்டியை அளிக்கிறது. அதே நேரத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கான FD யில் சற்று அதிகமாக 100 அடிப்படை புள்ளிகளுடன், 6.25% வட்டி கிடைக்கிறது. இத்திட்டம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், முன்கூட்டியே இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews