சில வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ள காரணத்தால் வங்கிகளின் IFSC code மாற்றப்பட்டுள்ளது. எனவே இபிஎஃப்ஓ பயனர்கள் தங்களது கணக்கில் உள்ள IFSC code ஐ அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ:
இபிஎஃப்ஓ தன் பயனர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது நிலவும் கொரோனா கால கட்டத்தில் பயனர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் தங்கள் இருப்பு கணக்கில் இருந்து 75% முன்பணமாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையை பயனர்கள் திரும்ப செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சலுகை கடந்த 2020 ஆண்டிலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் சில வங்கிகளில் இதர வங்கிகளுடன் இணைந்துள்ளது. இதனால் இணைந்த வங்கிகளின் IFSC code மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இபிஎஃப்ஓ தனது பயனர்களுக்கு ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆந்திர வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த வங்கிகளின் கணக்குகள் PF கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆன்லைன் மூலம் கிளைம் செய்ய முடியாது. எனவே சரியான IFSC ஐ வங்கியில் இருந்து பெற்று விவரங்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அப்போது தான் ஆன்லைன் மூலம் கிளைம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IFSC code அப்டேட் செய்யும் வழிமுறைகள்:
முதலில் பயனர்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய தளத்திற்கு சென்று உங்கள் UAN மற்றும் Password பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
பின் Manage என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து KYC என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அதில் வங்கி கணக்கு எண் தோன்றும். அதை கிளிக் செய்து புதிய IFSC code ஐ பதிவு செய்து save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த தகவல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, KYC update ஆகும்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.