மத்திய அரசு ஊழியர்களின் DA உயர்வு – நீடிக்கும் சிக்கல்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

1 Comments

மத்திய அரசு ஊழியர்களின் DA உயர்வு – நீடிக்கும் சிக்கல்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) அதிகரிக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை இன்னும் குறைவாகவே இருப்பதால் வரும் நாட்களில் DA உயர்வை பெறுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. DA உயர்வு
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த இறுதி முடிவுகளை எடுக்க மே 8 ஆம் தேதி அன்று CCS பிரதிநிதி அமைப்பின் தேசிய கவுன்சில் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டம் நடைபெறும் புதிய தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் JCM தேசிய கவுன்சில் பணியாளர்களின் செயலாளர் சிவா கோபால் மிஸ்ரா, 7 வது ஊதியக்குழு மேட்ரிக்ஸ் மற்றும் DA நிலுவைத் தொகையைப் பற்றி பேசியபோது, ஒரு மத்திய அரசு ஊழியரின் DA நிலுவைத் தொகை தற்போது சிக்கலில் உள்ளது. இதன் படி அரசு ஊழியர் ஒருவரின் ஊதியம் 1800 ஆக இருக்கையில், 7 வது ஊதிய கமிஷன் சம்பள வரம்புகள், 18,000 முதல் 56,900 இருக்கும். அந்தவகையில் ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச 7 வது ஊதியக்குழுவின் அடிப்படை சம்பளம் 18,000 ஆக இருக்கும். ஒரு மத்திய அரசு ஊழியருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணைக்கான DA உயர்வு கொடுக்கப்பட்டால், அவருக்கு 11,880 ரூபாய் ( ₹4320 + ₹3240 + ₹4320) உயர்வு கிடைக்கும். மேலும் 7 வது ஊதிய கமிஷன் அளவின் படி, லெவல் -1ல் மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவைத் தொகை 11,880 முதல் 37,554 வரை (₹ 13,656 + ₹ 10,242 + 13,656) இருக்கும். இந்த வகையில் லெவல் -13ல், ஒரு ஊழியரின் அடிப்படை ஊதிய அளவு 1,23,100 முதல் 15 2,15,900 வரை உயரலாம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews