CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடைமுறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 29, 2021

Comments:0

CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடைமுறைகள்!

கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வுகளுக்கான இறுதி முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட்ட பிறகு CBSE மாணவர்களுக்கான மறுதேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

CBSE மறுதேர்வுகள்
நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக இந்த ஆண்டும் மாநில பொதுத்தேர்வுகள், CBSE தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பல கட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு CBSE 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து தேர்வு வாரியம் அறிவித்த படி அம்மாணவர்களுக்கான மதிப்பீட்டுகள் முடிவு செய்யப்பட்டு, ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் CBSE தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத மாணவர்களுக்கான விருப்பத்தேர்வுகளை நடத்துவதாக தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. மேலும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த விருப்பத்தேர்வுகளை நடத்தலாம் எனவும் கல்வி வாரியம் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் விருப்பத்தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கான இணையதளம் திறக்கும். இதற்கு முன்னதாக CBSE கல்வி வாரியம், ஜூன் 17 ஆம் தேதி அன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான மதிப்பீட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த மதிப்பீட்டுக் கொள்கையின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உள் மதிப்பீடுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40 சதவிகிதமும், 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் இருந்து 30 சதவிகிதமும், 10 ஆம் வகுப்புகளில் பெற்ற 30 சதவிகிதத்தையும் சேர்த்து மொத்த மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும் CBSE மாணவர்களுக்கான மறுதேர்வுகள் முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடைபெறும். இத்தேர்வுகள் மைய அடிப்படையிலான தேர்வுகளாக ஆப்லைன் முறையில் நடைபெறும். கொரோனா நிலைமையை கணக்கில் கொண்டு ஆப்லைன் முறையில் தேர்வுகளை நடத்துவது சாத்தியமானால், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வுகள் நடத்தப்படும். மேலும் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews