தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மடிக்கணினி:
தமிழகத்தில் கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சி காலத்தில் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் வருடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. அரசு சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட மடிக்கணினி மாணவர்களின் உயர் கல்வி வகுப்புகளுக்கு தக்க உதவிகரமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சில மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதையடுத்து 2017-18 ஆம் ஆண்டுகளில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோரி மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. தற்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து பதிலளித்துள்ளார்.
அதன்படி அவர் தெரிவித்ததாவது, 2017-18 ஆம் ஆண்டுகளில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதி, மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியம். எனவே விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.