தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு – சுயநிதி பள்ளிகள் சங்கம் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 29, 2021

Comments:0

தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு – சுயநிதி பள்ளிகள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜூலை 12 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என தனியார் சுயநிதி பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் சுயநிதி பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் காமராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மொத்தமாக 2500 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் லட்சக்கணக்கில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காரணமாக 2019-2020, 2020-2021, 2021-2022 கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம் இருந்து எங்களால் முறைப்படி பெற முடியவில்லை. இதனால் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் திறக்கப்படாத பள்ளிகளுக்காக வாகனங்களின் இன்சூரன்ஸ், வரியினங்கள், மின் கட்டணம் போன்ற தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. இதனால் எங்களது பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் பள்ளிகள் திறப்பதற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் பள்ளிகளின் வரியினை தள்ளுபடி செய்து, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஏற்காவிடில் மாநில தலைமையின் உத்தரவுப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஜூலை 12 ல் முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews