தமிழகத்தில் ஜூலை 5 முதல் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – CEO அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 29, 2021

Comments:0

தமிழகத்தில் ஜூலை 5 முதல் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – CEO அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 5 முதல் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – CEO அறிவிப்பு
தமிழக அரசு அறிவித்தபடி அரசு பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூலை 5 ஆம் தேதி துவங்கும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை
அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைகளை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி துவங்கி மாணவர் சேர்க்கைகளை நடத்தலாம் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த 2021-22 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அந்த வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளில் 25%% இட ஒதுக்கீடு செய்ய அரசு அனுமதித்துள்ளது. அதன் படி மாவட்டம் முழுவதும் உள்ள 216 பள்ளிகளில், 2,459 இடங்களுக்கான புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளம் மூலம் நடைபெறும். அதற்காக புதிய மாணவர் சேர்க்கையில் LKG வகுப்புகளில் சேரும் மாணவர்கள் 3 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அம்மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் இருக்க வேண்டும். தவிர புதிய மாணவர் சேர்க்கைக்கு வருமான வரி சன்றிதழ் நகல், சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினரின் தகுதி சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து அந்த பள்ளிகள் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களின் விண்ணப்பங்களுடன் அவர்களது பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், மாணவர்களின் புகைப்படம் ஆகியவை கட்டாயம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews