கொரோனா 2 ஆம் அலை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த ஆலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் திறப்பு குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு வீதமானது சற்று குறைந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. ஆனால் குறைந்த நாட்களே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தினால் பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டது. மீண்டுமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டை போலவே இந்த ஆண்டும் +2 மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்யமுடியாததால், தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் +2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீதம் பேர் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான காரணத்தையும் கூறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு கூடிய விரைவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.