தொழில், வணிக, சேவை நிறுவனங்களின் உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவிப்பு
தொழில், வணிக, சேவை நிறுவனங்களுக்கு மே 1 முதல் செப்டம்பர் 30 வரை காலாவதியாக உள்ள அனைத்துச் சட்டப்பூர்வமான உரிமங்களை டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா சூழலில் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வமான உரிமங்களையும் டிசம்பர் இறுதி வரை நீட்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் 31 வரையான காலத்துக்குத் தடையின்மைச் சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிடம் பெற்ற வணிக உரிமங்கள் டிசம்பர் 31 வரை செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.