ஒரு 'டோஸ்' ஆகிறது 'கோவிஷீல்டு' தடுப்பூசி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

Comments:0

ஒரு 'டோஸ்' ஆகிறது 'கோவிஷீல்டு' தடுப்பூசி?

கோவிஷீல்டு' தடுப்பூசியை இரண்டு, 'டோஸ்'களுக்கு பதிலாக ஒரு டோஸ் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளதுCovishield vaccine, single shot, One Dose, Covishield, vaccine, ஒரு 'டோஸ் ,கோவிஷீல்டு, தடுப்பூசி?
.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசி தயாரித்தன. இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வினியோகிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்றும், மற்ற நாடுகளில், 'வாக்ஸேவ்ரியா' என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் இரண்டு டோஸ்களாக போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான கால இடைவெளியை, 4 - 6 வாரங்களில் இருந்து, 12 - 16 வாரங்களாக, மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்தது. ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி லைட்' மற்றும் அமெரிக்காவின் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' தடுப்பூசிகள் ஒரு டோஸ் மட்டுமே போடப்படுகின்றன. இதைப் போல கோவிஷீல்டையும், இரண்டு டோஸ்களுக்கு பதிலாக, ஒரு டோஸ் தடுப்பூசியாக மாற்றினால், அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:தடுப்பூசி போடும் தினசரி எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்ட மிட்டு வருகிறது. ஆக., முதல், மாதம் ஒன்றுக்கு, 20 - 25 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும். ஜூலை மத்தியில் இருந்தே, நாடு முழுதும், நாள் ஒன்றுக்கு, 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அதற்குள், ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் உள்நாட்டு தயாரிப்பும் துவங்கிவிடும். 'பைசர், மாடர்னா' தடுப்பூசிகளும் நம் நாட்டில் கிடைக்க துவங்கிவிட்டால், தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தற்போது இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை, ஒரு டோஸாக மாற்றினால், அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் மதிப்பீடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews