நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் இருந்து, மீண்டும் தனியார் பள்ளிக்கு மாறும் மாணவ, மாணவியரால், 9, 10ம் வகுப்புகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு, பள்ளிகளில் நிர்வாக பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யும் பெற்றோர், மாற்றுச்சான்றிதழ் கேட்டும், அட்மிஷன் கேட்டும், பள்ளிகளை நாட தொடங்கியுள்ளனர். இதில், 9, 10ம் வகுப்புகளில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகரித்துள்ளதும், பெற்றோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புக்கு மட்டும், முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு மாற்றினர். ஆன்லைன் வகுப்பு, தொலைபேசி மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள், அரசு பள்ளிகளில் இல்லாததால், பல குழந்தைகள் கற்றல் செயல்பாடுகளை மறந்துள்ளனர். அதேபோல், பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு, வழக்கமான கட்டணத்தில் இருந்து சலுகை அளித்துள்ளது. இதனால், பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, நடப்பாண்டில், 8, 9, 10ம் வகுப்புகளில் சேர்க்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஊரடங்கு நீக்கப்படும் நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.