தமிழக அரசு சார்பில் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

தமிழக அரசு சார்பில் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அரசு வழங்கும் மாத உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உதவி தொகை :
தமிழகத்தில் தமிழ் மொழியில் தீராத பற்றுடைய தமிழறிஞர்கள் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கோடு தமிழ் பணியாற்றி வருகின்றனர். தமிழ் மொழி வளர்ச்சியில் இவர்களின் பங்கு இன்றியமையாததாகும். இவர்களின் முதுமை காலத்தில் உதவும் நோக்கில் அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்கும் தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு வருவாய் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும் எனவும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchithurai.com இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் அல்லது மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 31 குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் தோறும் உதவி தொகையாக ரூபாய் 3,500 வழங்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews