ஆட்டி படைக்கும் கொடிய கொரோனா வைரஸ்: சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

ஆட்டி படைக்கும் கொடிய கொரோனா வைரஸ்: சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி

IMG_20210601_194616
ஆட்டி படைக்கும் கொடிய கொரோனா வைரஸ்: சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி
கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா 2ம் அலையின் தாக்கம் இந்தியாவில் மே மாதம் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 90 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 30 விழுக்காடு அதிகமாகும். ஒரே மாதத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே மே மாதத்தில் 26,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. பம்லானிவிமாப் 700 மி.கி., எட்டெசிவிமாப் 1400 மி.கி. மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத்தொடங்கி வரும் நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்துகள், கொரோனா சிகிச்சையில் மேலும் முன்னேற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84673731