மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை உடன் MA பட்டப்படிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை உடன் MA பட்டப்படிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் 12 வகுப்பு படித்துள்ள மாணவர்கள் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் படிப்புகள்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்துள்ள மாணவர்கள் இலவசமாக முதுகலை தமிழ் படிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இலவசமாக வழங்கப்படும் கல்விக்கு, தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இது குறித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை தரமணி பகுதியில் செயல்பட்டு வரும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் இணைந்து ஒருங்கிணைந்த முதுகலை படிப்பு அதாவது எம்.ஏ தமிழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த படிப்புகளை படிக்கும் மாணவர்கள் எவ்வித கல்வி கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் 15 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள முதுகலை தமிழ் படிப்பை பயிலும் மாணவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. அந்த வகையில்இப்படிப்புகளை மேற்கொள்ள தற்போது நடந்து முடிந்துள்ள கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விண்ணப்பதாரர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள்ளாக மாணவர்கள் விண்ணப்பங்களை செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கென தனி விடுதி வசதிகள் கொடுக்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இயக்குனர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2 ஆம் முதன்மை சாலை, மய்ய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-22542992 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews