பஞ்சாப் மாநிலத்தில் 12ம் வகுப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் முன்னதாக நடத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகள்:
பஞ்சாப் மாநில கல்வி வாரியத்துடன் இணைந்துள்ள பள்ளிகள் 5, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துகிறது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் 5, 8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு முடிவுகளை அறிவித்து விட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இறுதி முடிவு நிலுவையில் உள்ளது. மாணவர்களின் உயர்கல்விக்கு 12ம் வகுப்பு இறுதி முடிவுகள் மிகவும் அவசியமானதாக உள்ளது.
பஞ்சாப் வாரியம் ஏற்கனவே தொழிற்துறை மற்றும் என்.எஸ்.கியூ.எஃப் பாடங்களுக்கான நடைமுறை தேர்வுகளை நடத்தியுள்ளது. மற்ற பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. பொதுத்தேர்வு தேர்வுகள் மாணவர்களின் வீடுகளை சுற்றி 3 கிலோமீட்டர் இடைவெளிக்குள் தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு மறுதேர்வுகள் நடத்தப்படும். தேர்வு நடக்கும் தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்வுகள் கட்டுப்பாட்டாளர், செய்முறை தேர்வின் போது கொரோனா தடுப்பு தொடர்பாக பஞ்சாப் அரசு மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.