Breaking

Thursday, June 10, 2021

தமிழகத்தில் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா? மேலும் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மேலும் தளர்வுகள் இருக்குமா?
11 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?
முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பதை குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு சுகாதாரத் துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்! தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் இருக்குமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது தொடர்பாக அரசுத் துறை உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு இரு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்ததால் அந்தப் பகுதிகளில் மட்டும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. காய்கறி, மளிகை, பூக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகள் திறக்கப்பட்டன. மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குவோர் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். வருகிற 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் துவங்க உள்ளது. இந்த ஆலோசனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog