Breaking

Saturday, May 08, 2021

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை – பெற்றோர்கள் தயக்கம் !!

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வழங்க அரசு அனுமதி வழங்கிய போதும் கொரோனா நிலைமை சரி செய்ததற்கு பின்னரே மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் மனநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமையை சரி செய்ய ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு வாய்வழி உத்தரவிட்ட நிலையிலும் பல பெற்றோர்கள் கொரோனா பரவல் சரி ஆன பின்னரே மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை மந்தநிலையில் தான் உள்ளது. விரைவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. ஆனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படாமல் உள்ளதால் அதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog