ஹிமாச்சல் பிரதேசத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களில் நடக்க இருந்த பொது சேவை ஆணையத்தின் (HPPSC) தேர்வுகளை கொரோனா காரணமாக ஒத்தி வைத்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல பல மாநிலங்களில் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக மே மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட இருந்த பொது சேவை ஆணையத்தின் (HPPSC) தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தேர்வாணையம் தெரிவிக்கையில், ‘மே மற்றும் ஜுலை மாதங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற பாடங்களுக்கான விரிவுரையாளர் மற்றும் வன அலுவலர் பணிக்கான ஸ்கிரீனிங் டெஸ்ட், கணினி அடிப்படையிலான சோதனைகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 27.03.2021 ஆம் நாள் செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது’ என அறிவித்துள்ளது. இதில் வன அலுவலருக்கான தேர்வு தவிர பிற தேர்வுகள் கணினி அடிப்படையில் நடத்தப்பட இருந்தது. தற்போதுள்ள கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு அதற்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொது சேவை ஆணையம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.