தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பம் மூலமாக பண பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. அந்த வகையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கூகுள் பே செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் பே அப்டேட்:
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணத்தினால் நாம் இருந்த இடத்திலிருந்தே பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, முன்னதாக நாம் ஒரு வங்கியில் பணத்தை செலுத்துவதற்காகவோ, எடுப்பதற்காகவோ அல்லது பரிமாற்றம் செய்வதற்காகவோ வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய சூழல் இருந்தது. ஆனால் இத்தகைய சேவைகள் எல்லாம் தற்போது நம் கையிலிருக்கும் ஒரு மொபைல் மூலமாக எளிதாகி விட்டது. இது மாத்திரம் அல்ல, மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் புக்கிங், EB பில் போன்ற பல சேவைகளை கூகுள் பே செயலி வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் பண பரிமாற்றம் செய்வதற்கு முதன்மையான சேவையாக கூகுள் பே இருந்து வருகிறது. இந்தியாவின் பேமண்ட் செயலிகள் பிரிவிலும் இந்த கூகுள் பே முன்னணி தளமாக இருக்கிறது. இந்நிலையில் கூகுள் பே செயலியில், சர்வதேச பண பரிமாற்றம் என்ற புதிய வசதி தற்போது வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக கூகுள் பே மூலம் அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும்.
அதாவது சுருங்க கூறின், கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக கூகுள் பே செயலியில் உள்ள Pay என்ற ஆப்ஷனில் Western Union அல்லது Wise போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்பாக அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி மிக எளிமையாக சர்வதேச பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இதில் அறிமுக சலுகையாக Western Union சேவையில், அன்லிமிடெட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. அதாவது இந்த கூகுள் பே செயலி மூலம் வெளி நாடுகளுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து கூகுள் பே Wise சேவையில் முதல் பரிமாற்றம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புதிய அறிமுகமான சர்வதேச பண பரிமாற்ற சேவை, அமெரிக்க பயனாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கூகுள் பே சேவை உலகின் 200 நாடுகளுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.
Search This Blog
Wednesday, May 12, 2021
Comments:0
கூகுள் பே (GPay) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.