இந்தியாவில் முழு முடக்கம்?? – அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 07, 2021

1 Comments

இந்தியாவில் முழு முடக்கம்?? – அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஒரு வேளை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு மேலும் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 4 லட்சம் மக்கள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் நாடு தழுவிய பொது முடக்கத்தை அறிவிக்க பல மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு பார்க்கையில், கொரோனாவுக்கு எதிரான கடைசி ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்க அதிகளவு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு இழப்பு நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சுமார் 70 சதவீத மக்கள் தங்களது வேலையே இழந்தனர். அதே போல டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், வாடகை கொடுக்க முடியாமல், உணவு கிடைக்காமல் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அந்த நிலை மாறி கடந்த ஜனவரி மாதம் முதல் நிறுவனங்கள் மீண்டுமாக செயல்பட துவங்கியது. அதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி வளர்ச்சி அடைய துவங்கியது. இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனா இரண்டாம் அலையால், மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மட்டும் 70 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலை மேலும் நீடித்தால் இந்த மே மாதத்திலும் வேலைவாய்ப்பின்மை இதைவிட அதிகமாகும் என CMIE அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. First wave valai poittu innum valai kedaikavillai

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews