நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்வுகள் ரத்து செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வுகள்:
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தும், தள்ளி வைத்தும் வருகின்றது. அந்த வகையில் பல கட்ட கோரிக்கைக்கு பின்னர் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு 4 லட்சத்தையும் கடந்து விட்டது. இந்த சூழல் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது என்பது இயலாத காரியம். ஆதலால் # cancel12thboardexams2021 என்ற ஹாஸ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது. தொற்றுநோயின் இரண்டாவது அலையை காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மத்திய கல்வி அதிகாரி ஒருவர், ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாவிட்டால், தேர்வுகளை மேலும் தாமதப்படுத்த முடியாது. தேர்வு செயல்முறைக்கும் மதிப்பீடு மற்றும் முடிவுகள் அறிவிப்பதற்கு ஒரு மாத காலம் ஆகலாம். முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று வைத்தாலும், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை சிக்கலாகி விடும். இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்த மதிப்பீடு முறையை கையாளுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.