தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 15, 2021

Comments:0

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!!

தமிழக அரசின் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுவது தான் ரேஷன் கார்டு. இது தொலைந்து போனால் ஆன்லைன் வாயிலாக எப்படி புது கார்டு பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
புதிய ரேஷன் கார்டு: அரசு நடத்தும் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ள ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். இந்த ரேஷன் கார்டு தொலைந்து போனால் ஆன்லைன் வாயிலாக எப்படி புது ரேஷன் கார்டு பெறலாம் என்ற வழிமுறைகள் இதோ, முதலில், https://tnpds.gov.in/ என்ற இந்த வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்ற ஒரு சாய்ஸ் இருக்கும். அதனை கிளிக் செய்து, அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்று இருக்கும், அதனை கிளிக் செய்து உள்செல்லவும். அதன் பிறகு, அதில் குடும்பத்தாரின் பெயர்களை டைப் செய்ய வேண்டும். பின்பு, மற்ற விவரங்களான முகவரி, குடுமபத்திரின் வயது போன்றவற்றை டைப் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!! பின், அனைவரின் புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டும். அதற்கு பிறகு, அட்டை தேர்வு என்ற ஒரு சாய்ஸ் ஒன்று இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான அட்டையை தேர்ந்தெடுத்து விட்டு, உங்களது ஆவணங்களை பதிவேற்றவும். பின், உறுப்பினர் சேர்க்கை, எரிவாயு எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதனை பதிவிடவும். பின், அனைத்தையும் சரி பார்த்து விட்டு சப்மிட் கொடுக்கவும். இதற்கு பிறகு பல முறை உங்களது கோரிக்கை சரிபார்க்கப்பட்டு 1 அல்லது 2 மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைத்து விடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews