தமிழகத்தில் கொரோனா பேரிடரில் தனியார் பள்ளிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் கடன் தவணை செலுத்துதலில் இருந்து சலுகை அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) வலியுறுத்தியுள்ளது.
இதன் மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:மாநிலத்தில் 15 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனாவால் இப்பள்ளிகள் மூடப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
குறிப்பாக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடனுக்கான தவணை களை செலுத்த முடியவில்லை. மார்ச் - ஆகஸ்ட் வரை தவணை தள்ளி வைப்பு சலுகையை ஆர்.பி.ஐ., அளித்தும் அதன்பின்னும் பள்ளி திறக்கப்படாததால் நெருக்கடி தீர்ந்தபாடில்லை.
மாணவர்களிடம் 70 சதவீதம் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அனுமதித்தாலும் 90 சதவீதம் பள்ளிகளில் 5 சதவீதம் கூட வசூலாகவில்லை. தவணை செலுத்த முடியாததால் பள்ளிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சியளிக்கிறது.கொரோனா பாதிப்பில் பல துறைகளுக்கு மத்திய, மாநில மாநில அரசுகள் சலுகை வழங்கியுள்ளன.
தனியார் பள்ளிகள், ஆசிரியர்களை கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது.இப்பேரிடர் காலத்தை சமாளிக்க கடன் நிறுத்தி வைப்பு (ரைட்ஆப்) அல்லது பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை தவணை தள்ளி வைப்பு சலுகை அளிக்க வேண்டும். வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், என கூறினார்.
Search This Blog
Sunday, May 16, 2021
1
Comments
தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
99.99% Of the private schools are exploiting Private School teachers. They aren't paid their due salaries and their due benefits like PF, ESI and other benefits. They dont have job security and should be ready to be chased out at anytime by private institutions. There's not even a single spokesperson for the distressed private school teachers. Even co government teachers don't rise their voice for private school teachers because they are well fed by the government though they aren't deserved for the salary they get. Even the so called present government don't care about private teachers because most of the private institutions are run by politicians and capitalists.The politicians give more importance to government servants because they would be helpful for them make and hide their corruption. In reality both these politicians and government servants are in the same pond. With the help of government servants politicians make corruption and give share to government servants in the name of exuberant salary they don't deserve. You both are blood sucking leeches.
ReplyDelete