பள்ளிக் கல்வியில் இரண்டாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான பயிற்சி புத்தக பாடங்கள் மே 11-ஆம் தேதி முதல் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால், மாணவா்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்ய, இடைக்கால சிறப்பு கல்வித் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், பிரத்யேக ‘பிரிட்ஜ் கோா்ஸ்’ கையேடு வடிவமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ‘பிரிட்ஜ் கோா்ஸ்’ கையேடு காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வரும் மே 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அதைத்தொடா்ந்து பயிற்சி புத்தகப் பாடங்களும் தற்போது காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை கல்வித் தொலைக்காட்சியில் மே 11 முதல் 18-ஆம் தேதி வரை ஒளிபரப்பு செய்யப்படும். 2 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு தினமும் 2 காணொலிகள் வீதம் ஒரு மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பாகும்.
இதற்கான காலஅட்டவணையை சாா்ந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து காணொலிகளை மாணவா்கள் தினமும் பாா்த்து பயன்பெறுவதை உறுதிசெய்ய அனைத்து தலைமை ஆசியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநா் மு.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
Search This Blog
Saturday, May 08, 2021
Comments:0
Home
EDUCATION
NEWS
கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி புத்தக பாடங்கள் மே 11-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு!
கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி புத்தக பாடங்கள் மே 11-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.