தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ இணையதளத்தின் மூலம் அறியலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின்
விவரங்களை இணையதளத்தில் அறியலாம். பிராண வாயு வசதியில்லாத சாதாரண படுக்கைகள், பிராண வாயு வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
Saturday, May 08, 2021
மருத்துவமனை படுக்கை விவரங்களை இணையத்தில் அறியலாம்: தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.