43-வது (GST)சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

43-வது (GST)சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்!

1. தாமதக் கட்டணத் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்களுக்கு, நிவாரணம் அளிக்கவுள்ளது.
2. ஜிஎஸ்டிஆர்-3பி & ஜிஎஸ்டிஆர்-1 ஆகிய படிவங்களைத் தாமதமாகத் தாக்கல் செய்தால் விதிக்கப்படும் தாமதக் கட்டணம், வரி செலுத்தும் காலங்களில் (2021 ஜூன் முதல்) சீரமைக்கப்படும்.
3. திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தைத் தாமதமாகத் தாக்கல் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணம், வரி செலுத்தும் காலங்களில் (நிதியாண்டு 2021-22 முதல்) சீரமைக்கப்படும்.
4. பணி புரியும் இடத்தில் வரிபிடித்தம் (TDS) செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தை தாமதமாக தாக்கல் செய்யும்போது விதிக்கப்படும் தாமதக் கட்டணம், 2021 ஜூன் முதல் சீரமைக்கப்படும்.
5. சிஜிஎஸ்டி விதிகளில், 36 (4) ஆம் விதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், உள்ளீட்டு வரிக்கடனைப் பெறுவதில் தளர்வுகளை அளிக்கும். 6. கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வரிசெலுத்துவோருக்கு இணக்கம் தொடர்பான நிவாரணம்.
7. காலாண்டு மற்றும் மாதாந்திர வரி செலுத்தும் (QRMP) திட்டத்தின் கீழ் இல்லாத வரி செலுத்துவோருக்கு இணக்கம் தொடர்பான நிவாரணம்.
8. காலாண்டு வருவாய் தாக்கல் மற்றும் மாதாந்திர வரி செலுத்துதல் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.
9. கலவைத் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.
10. ஐடிசி-04 படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews