தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நேரடியாக நடத்தப்படும் எனவும், தேர்வு நடைபெறும் தேதிக்கு 15 அல்லது 30 நாட்களுக்கு முன்னதாக இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அசாதாரண சூழ்நிலையில் தேர்வுகள் நடத்துவது சிரமம் என்பதால் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற திட்டங்கள் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என விவாதிக்கப்பட்டது. அந்த ஆலோசனை முடிவில் உயர்கல்வி காரணமாக மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் சுகாதாரத்துறை ஆலோசனை கேட்டு அதன் பின்னர் பொதுத்தேர்வு நடத்தும் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதிக்கு 15 அல்லது 30 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.