Breaking

Saturday, May 15, 2021

மே 27 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – பாரதியார் பல்கலை அறிவிப்பு!!

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் வரும் மே 27 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கொரோனா நோய் தாக்கத்தின் காரணாமாக தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அவர்களது கல்வி நலன் கருதி ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் தமிழகத்தில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வரும் மே 24 ஆம் தேதியுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவடைய இருப்பதால் அட்டவணைப்படி மே 27 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி காலை 9.45 மணிக்கு கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. பின், மாணவர்கள் பிடிஃப் வடிவில் விடைத்தாள்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் கல்லூரிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog