இங்கிலாந்தில் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அமேசான் நிறுவனம், மேலும் 10,000 பேரை பணியில் அமர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் பணி வாய்ப்பு: ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் அமேசான், உலகளவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு, பல நாடுகளில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் அமேசான் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, 10 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் படி இந்த நடப்பு ஆண்டின் இறுதியில், இங்கிலாந்தில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் விரிவுபடுத்தப்படும் அமேசான் அலுவலகங்களில் இந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் சேவைகள் அதிகரிக்கப்படும் என்ற நோக்கத்தில், அமேசான் நிறுவனம் அதிகளவு ஊழியர்களை, பணியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில் வட அமெரிக்காவின் லாகிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுக்காக 75,000 தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சம் புதிய தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஆன்லைன் சேவைகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்தியாவிலும் அமேசான் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, கொரோனா காலத்தில் வேலை இழந்த பல குடும்பங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.