பிளஸ் 2 பொதுத்தேர்வு தாமதமாகும் நிலையில், மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள், 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலையின் தீவிரத்தால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், மே, 5ல் பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவலால், தேதி குறிப்பிடாமல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொதுத்தேர்வை எப்போது வேண்டுமானாலும் நடத்த, பள்ளி கல்வித்துறை ஆயத்தமானது. மாணவர்களுக்கு வேண்டிய வெற்று விடைத்தாள் மற்றும் முதன்மை விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டன. பொதுத்தேர்வுக் கான வினாத்தாள்களும், 3,000 தேர்வு மையங்களுக்கும் சேர்த்து, மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டன. அவை, மாவட்ட வாரியாக, கட்டுக்காப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்ட சில பள்ளிகளின் அறைகளில், பூட்டி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், பொதுத்தேர்வு விரைவில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, மாவட்ட வாரியாக இருப்பு வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், வினாத்தாள்கள் வைக்கப்பட்ட கட்டுக்காப்பு மையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பை பலப்படுத்தி, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசை பணியில் அமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் இருக்கும் அறைகளை, தனியாக சென்று எந்த அதிகாரியும், பொறுப்பு ஆசிரியரும் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.