அசாம் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வழக்கமாக நடைமுறையில் உள்ள விடுமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டு நாளை (மே15) முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை அறிவிப்பு:
அசாம் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை கோடை விடுமுறை விடப்படும்.
ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நாளை (மே 15) முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய COVID-19 கட்டுப்பாடுகளின் படி அந்த மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மே 18 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பில் மாற்றம் தெரிவித்து ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. அசாம் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (AHSEC) முன்னதாக 11 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களையும் 12 ஆம் வகுப்புக்கு நேரடியாக அனுப்பியது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Search This Blog
Friday, May 14, 2021
Comments:0
ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - அசாம் மாநில அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.