கொரோனா பரவலில் இருந்து மீண்டு வருபவர்களை தாக்கும் அடுத்த உயிர்க்கொல்லி நோயால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர்க்கொல்லி நோய்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஒரு நாளில் 4000க்கு அதிகமான உயிரிழப்புகள் பதிவாகிறது. இந்த நோய் பரவலில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளான நீரிழிவு நோய்யாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் நோய் அதிகமாக பரவி வருகிறது.
இந்த நோய்க்கு காரணம் ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் கண் வலி, வீக்கம், பார்வை இழப்பு போன்றவை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் வரும் அப்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் மூக்கில் பிரச்சினை ஏற்படும், சைனஸ் பிரச்சினை வரும், ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும். உறுப்புகள் செயலிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு 52 பேர் உரியிழந்துள்ளனர்
Search This Blog
Friday, May 14, 2021
Comments:0
இந்தியாவில் பரவும் அடுத்த உயிர்க்கொல்லி நோய் – 52 பேர் பலி!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.