ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 14, 2021

Comments:0

ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ள ஆதார் அட்டையை பல்வேறு பணிகளுக்கு நாம் உபயோகித்து கொள்ளலாம். அந்த வகையில் ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை:
தனி மனித அடையாளத்துக்காக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகள் 12 இலக்க எண்களை உடையது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும், வங்கி போன்ற பல தரப்பட்ட சேவைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அட்டைகளை நாம் வெளியே எடுத்து செல்லும் போது, எங்கேயாவது தொலைத்து விட நேரிடும். இப்படி எந்தவொரு சூழலும் ஏற்படாத வகையில் நம் ஆதார் அட்டைகளை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். அந்த வகையில் ஆன்லைன் ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, https://uidai.gov.in என்ற UIDAI யின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
அதனுடைய முகப்பு பக்கம் திறந்ததும் Get Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன் அடுத்த பக்கத்தில் Download Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக நீங்கள் உங்கள் ஆதார் எண், Enrolment ID அல்லது Virtual ID என்பதை பதிவு செய்ய வேண்டும்.
இதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய ஆதார் எண்ணை நான்கு, நான்காக பிரித்து பதிவு செய்ய வேண்டும்.
பிறகு இ – ஆதார் கார்டு பெற I want a masked Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்ட கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்து , send OTP என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின்பாக உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
Enter a TOTP என்ற ஆப்ஷனில் உங்களுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு Verify and Download என்பதை கிளிக் செய்யவும்.
கடைசியாக PDF பைலை SAVE செய்து, உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Enrolment ID வைத்து பதிவிறக்கம் செய்ய,
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Enrolment ID வைத்து ஆன்லைன் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதலில் https://uidai.gov.in என்ற UIDAI யின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
அதனுடைய முகப்பு பக்கம் திறந்ததும் Get Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன் அடுத்த பக்கத்தில் Download Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
அதில் Enrolment ID என்பதை தேர்வு செய்யவும்.
அதில் உங்கள் Enrolment ID எண்ணை கிளிக் செய்யவும்.
அதன் பின்பாக உங்கள் பெயர், முகவரி, பின் நம்பர் போன்ற தகவல்களை கொடுக்கவும்.
பிறகு இ – ஆதார் கார்டு பெற I want a masked Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்ட கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்து , send OTP என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின்பாக உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
Enter a TOTP என்ற ஆப்ஷனில் உங்களுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு Verify and Download என்பதை கிளிக் செய்யவும்.
கடைசியாக PDF பைலை SAVE செய்து, உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Virtual ID வைத்து பதிவிறக்கம் செய்ய,
இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள STEP ல் 1 முதல் 3 வரையுள்ளவற்றை பின்பற்றவும்.
பிறகு Virtual ID என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
அதில் 16 இலக்க Virtual ID எண்ணை பதிவு செய்யவும்.
அதன் பின்பாக உங்கள் பெயர், முகவரி, பின் நம்பர் போன்ற தகவல்களை கொடுக்கவும்.
பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள படி 6 முதல் 10 வரை கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றி ஆன்லைன் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews