பொதுமுடக்கத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது அரசு!
சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 08-05-2021 மற்றும் 09-05-2021 (ஞாயிறு) ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 09-05-2021 (ஞாயிறு) அன்று கடைசியாக புறப்படும் பேருந்துகள் கீழ்கண்டவாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முககவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும். இதனை பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதியான www.tnstc.in மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தினையும் பின்பற்றி தங்கள் சொந்த கொள்ளப்படுகிறார்கள். இடங்களுக்கு பயணம் செய்யுமாறு கேட்டுக்
மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பணிசெய்யும் இடத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு (Point to Point) பேருந்துகள் தேவைப்படின் கீழ்கண்ட கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Search This Blog
Saturday, May 08, 2021
Comments:0
Home
INFORMATION
PEOPLE'S
Press Release
TAMILNADU
பொதுமுடக்கத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு
பொதுமுடக்கத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு
Tags
# INFORMATION
# PEOPLE'S
# Press Release
# TAMILNADU
TAMILNADU
Labels:
INFORMATION,
PEOPLE'S,
Press Release,
TAMILNADU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.