Breaking

Friday, April 23, 2021

அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் தள்ளிவைப்பு!

தடுப்பூசி தட்டுப்பாட்டால், அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு, இரண்டாவது தவணை தடுப்பூசி காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில், அரசு ஊழியர்கள், முன் கள பணியாளர்கள், போலீசார் போன்றோருக்கு, அரசின் சார்பில் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு, ஒவ்வொரு துறைக்கும் நாட்கள் குறிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., படிப்புக்கு முதுநிலை பட்டம் அந்தஸ்து
இந்நிலையில், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மார்ச் 19ல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இரண்டாம் தடுப்பூசிக்கு பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தயாராக இருந்தனர். இந்நிலையில், 'கோவாக்சின்' தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, பேராசிரியர்களுக்கு பல்கலை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog